April 27, 2017 tamilsamayam.com
பாகுபலி-2 படத்தின் பிரீமியர் காட்சியை பார்த்த ஒருவர், படம் சிறப்பாக இருப்பதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
உமர் சந்து என்ற பெயரில் டிவிட்டரில் இயங்கும் அந்த நபர், தன்னை பிரிட்டன் மற்றும் அமெரிக்க சென்சார் போர்டு உறுப்பினர் என அழைத்துக் கொள்கிறார். இன்று அமெரிக்காவில் திரையிடப்பட்ட ”பாகுபலி- 2” படத்தின் பிரீமியர் காட்சியை பார்த்ததாக கூறியுள்ள அவர், அது குறித்து தனது வலைப்பக்கத்தில் சிறிய விமர்சனம் ஒன்றையும் எழுதியுள்ளார்.
அதில் பாகுபலி 2 திரைப்படத்திற்கு அவர் 5 ஸ்டார் மதிப்பீடு அளித்திருக்கிறார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள கிராபிக்ஸ் காட்சிகள் , லார்ட் ஆஃப் த ரிங்ஸ் மற்றும் ஹாரி பாட்டர் போன்ற ஹாலிவுட்டின் சூப்பர் ஹிட் திரைப்படங்களுக்கு நிகராக இருந்ததாகவும் உமர் தெரிவித்துள்ளார்.
பிரபாசின் நடிப்பு பாராட்டத்தக்க வகையில் இருந்ததாகவும், ராணா மற்றும் ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் தனது விமர்சனத்தில் கூறியுள்ளார். இன்று பாகுபலி-2 திரைப்படம் பிளாக்பஸ்டர் படமாக உருவாகியுள்ளது மட்டுமின்றி, எதிர்காலத்தில் கிளாசிக் பட வரிசைகளில் பாகுபலி 2 திரைப்படம் இடம்பெறும் எனவும் அவர் உறுதிபட கூறியுள்ளார்.