• Download mobile app
22 Nov 2024, FridayEdition - 3208
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அருள்மிகு மங்களநாதர் திருக்கோயில்

April 27, 2017 tamilsamayam.com

சுவாமி : மங்களநாதர்.

அம்பாள் : மங்களேஸ்வரி.

தலவிருட்சம் : இலந்தை மரம்.

தலச்சிறப்பு :

இங்குள்ள நடராஜ சிலை மரகதத்தால் ஆனது. வருடம் முழுவதும் நடராஜருக்கு சந்தன காப்பு சாத்தப்பட்டிருக்கும். வருடத்தில் ஒரு நாள் ஆருத்ரா தரிசனத்தன்று சந்தனக்காப்பு கலையப்பட்டு மக்கள் தரிசிப்பர். அச்சமயம் ஆயிரக்கணக்கான மக்கள் இத்தலத்தில் கூடுவர். வேதத்தின் இரகசியங்களை உமையம்மைக்கு ஈசன் அருளிய புண்ணிய திருத்தலம். சிவனின் உறைவிடம் மிக பழமையானது. தாழையை சிவன் அணியும் ஸ்தலம். சிவனுக்கு புனுகு சாத்தப்பட்டு ஸ்படிகலிங்கத்திற்கு அபிஷேகம் நடைபெறும். இக்கோவில் சிதம்பரம் கோவிலுக்கு முன்பே தோன்றியது. எனவே உத்திர கோசமங்கைக்கு ஆதி சிதம்பரம் என்ற ஒரு பேரும் உண்டு.

தல வரலாறு :

முன்னொரு காலத்தில் மண்டோதரி (ராவணனின் மனைவி) உலகிலேயே சிறந்த சிவபக்தனைத் தான் திருமணம் முடிப்பேன் என அவள் முடிவெடுத்தாள். ஈசனை தியானித்தாள். சிவபெருமான் தான் பாதுகாத்து வந்த வேத ஆகம நூல் ஒன்றை முனிவர்களிடம் ஒப்படைத்து, “நான் மண்டோதரிக்கு காட்சிதர செல்கிறேன். திரும்பி வரும் வரை இதை பத்திரமாக வைத்திருங்கள்,” என கூறிச்சென்றார். மண்டோதரியின் முன்பு குழந்தை வடிவில் காட்சி தந்தார். அப்போது ராவணன் அந்த குழந்தை சிவன் என்பதை புரிந்து கொண்டான். சிவனைத் தொட்டான். அந்த நேரத்தில் இறைவன் அக்னியாக மாறி ராவணனை சோதித்தார். உலகில் அனைத்தும் தீப் பற்றி எரிந்தன.

சிவன் முனிவர்களிடம் விட்டு சென்ற வேத ஆகம நூலுக்கும் ஆபத்து வந்தது. முனிவர்கள் அதைக்காப்பாற்ற வழியின்றி, சிவன் வந்தால் என்ன பதில் சொல்வது என்ற பயத்தில், தீர்த்தத்தில் குதித்து இறந்தனர். அது “அக்னி தீர்த்தம்” என பெயர் பெற்றது. அங்கிருந்த மாணிக்கவாசகர் மட்டுமே தைரியமாக இருந்து அந்த நூலை காப்பாற்றினார். பிறகு ராவணனுக்கும் மண்டோதரிக்கும் திருமணம் நடக்க சிவன் அருள்பாலித்தார். மாணிக்கவாசகருக்கு தன்னைப் போலவே லிங்கவடிவம் தந்து கவுரவித்தார். இப்போதும் இத்தலத்தில் மாணிக்கவாசகர் லிங்கவடிவில் காட்சி தருகிறார்.

பாடியோர் : மாணிக்கவாசகர்.

நடைதிறப்பு : காலை 5.30 மணி முதல் 12.45 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைத்திறந்திருக்கும்.

அருகிலுள்ள நகரம் : ராமநாதபுரம்.

கோயில் முகவரி : அருள்மிகு மங்களேஸ்வரி சமேத மங்களநாதர் திருக்கோயில், உத்தரகோசமங்கை – 623 533, ராமநாதபுரம் மாவட்டம்.

மேலும் படிக்க