April 27, 2017 தண்டோரா குழு
உலகின் மிகபெரிய தேடுதல் தளமான கூகுள் நிறுவனம் தனது பயனாளர்களுக்கு பல்வேறு வசதிகளை அளித்து வருகிறது. அதில் ஓன்று தான் கூகுள் மேப். அதில், உலகில் நாம் எங்கு செல்ல வேண்டுமோ அங்கே செல்ல வழியை காட்டும்.
தற்போது, காரை எங்கே நிறுத்தினீர்கள் என்பதை கூகுள் மேப் மூலம் அறிந்து கொள்ளும் புதிய வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.அதன்படி ஆண்ட்ராய்டு தளத்தில் கூகுள் மேப்பில், சேவ் யுவர் பார்க்கிங் (Save your parking) என்ற ஆப்ஷனை பயன்படுத்தி காரை எங்கே நிறுத்தினீர்கள் என்பதை பதிவு செய்து கொள்ளலாம்.
இதுமட்டுமின்றி, கார் நிறுத்தம் குறித்த கூடுதல் தகவல்களையும் இதில் சேர்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கார் நிறுத்த தகவல்களையும் இடத்தையும் புகைப்படமாக எடுத்து நண்பர்களுக்கு அனுப்பும் வசதியும் இதில் உள்ளது.