April 29, 2017 தண்டோரா குழு
சிலி நாட்டில் தற்கொலைக்குத் தூண்டும் ‘ப்ளூ வேல்’ என்னும் ஆன்லைன் விளையாட்டை பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
தென் அமெரிக்காவிலுள்ள சிலி நாட்டில், 5௦ நாட்கள் ஆன்லைன் மூலம் ‘‘ப்ளூ வேல் சேலஞ்ச்’ என்னும் விளையாட்டில் பங்கேற்க இளைஞர்களுக்கு அழைப்பு விடப்பட்டது. இந்த விளையாட்டின் இறுதியில் பங்கேற்ற சுமார் 1௦௦ இளைஞர்கள் தற்கொலை செய்துக்கொண்டதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்துள்ளன.
இதன் காரணமாக இந்த விளையாட்டை சிலி தடை செய்துள்ளது. தடையை மீறி விளையாடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தற்கொலையை தடுக்கும் விதமாக பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு சிலி நாட்டு சைபர் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.