May 2, 2017 தண்டோரா குழு
மாணவர்களின் அடிப்படை விவரங்கள் கொண்ட ஸ்மார்ட் கார்ட் விரைவில் அறிமுகப்படுத்தபடும் என பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
கோபி அருகே உள்ள கெட்டிச்செவியூரில், 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கால்நடை மருத்துவமனைக்கு தமிழக பள்ளி கல்வித்துறை செங்கோட்டையன் இன்று அடிக்கல் நாட்டினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு கல்வித்தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும்,நடப்பாண்டு இறுதிக்குள் தமிழகத்தில் அனைத்து மாணவர்களுக்கும் மாணவர்களின் அடிப்படை விவரங்கள் கொண்ட ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.