• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சப் கலெக்டரை காதல் திருமணம் செய்யும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,

May 3, 2017 தண்டோரா குழு

கேரளாவில் எம்எல்ஏ ஒருவர் சப்-கலெக்டரை காதலித்து திருமணம் செய்யவுள்ள தகவல் மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி நடந்த போது சபாநாயகராக இருந்தவர் கார்த்திகேயன். இவர் மரணம் அடைந்ததை தொடர்ந்து அவரது தொகுதியான அருவிக்கரை தொகுதியில் அவரது மகன் சபரிநாதன் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்றார்.காங்கிரஸ் கட்சியின் இளம் எம்.எல்.ஏ.வான சபரிநாதன் தொகுதி மக்களிடம் அன்பாக பழகி அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறார்.

இந்நிலையில், சபரிநாதன் தனது பேஸ்புக் பக்கத்தில் தனது திருமணம் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், எனது திருமணம் பற்றி பலரும் கேட்டு வருகின்றனர். தற்போது இதனை மகிழ்ச்சியாக அறிவிக்கின்றேன். திருவனந்தபுரத்தில் சப் கலெக்டராக இருக்கும் டாக்டர் திவ்யா எஸ்.ஐயர் என்பவரை திருமணம் செய்ய உள்ளேன். நாங்கள் பழகிய போது, எங்களது கொள்கை, எண்ணம் ஆகியவை ஒத்து போனதை அறிந்தோம். இருவீட்டார் சம்மதத்துடன் எங்கள் திருமணம் ஜூன் மாதம் நடைபெறும். திருமண தேதியை பெரியோர்கள் முடிவு செய்வார்கள் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் தானும் திவ்யா அய்யரும் ஜோடியாக இருக்கும் போட்டோவையும் சபரிநாதன் எம்.எல்.ஏ. தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.இதைத்தொடர்ந்து பேஸ்புக்கில் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

திவ்யா வேலூர் சிம்சி மருத்துவ கல்லூரியில் டாக்டர் பட்டம் பெற்றார். தொடர்ந்து 2013ல் ஐ.ஏ.எஸ். ஆக தேர்வானார். கோட்டயத்தில் உதவி கலெக்டராக பணிபுரிந்த அவர் தற்போது, திருவனந்தபுரத்தில் சப் கலெக்டராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க