May 3, 2017 தண்டோரா குழு
சீனாவின் தென் பகுதியில் உள்ள ஷுஹாய் என்னும் நகரத்தில் நிலத்திலும் தண்ணீரிலும் பயணம் செய்ய கூடிய மிக பெரிய விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானத்தின் முதல் சோதனையாக பறக்கும் சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது. இந்த சோதனை செவ்வாய்க்கிழமை(மே 2) நடந்துள்ளது. இதனுடைய மற்ற சோதனைகள் இன்னும் சில நாட்களுக்குள் நடத்தப்படும் என்று சீன விமான போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
இந்த விமானம் AG 600 ரக வகை ஆகும். 37 மீட்டர் நீளமும், 38.8 மீட்டர் நீளமுடைய இறக்கையும், 53.5 டன் எடையும் கொண்டது இந்த விமானம். 2௦ வினாடிகளில் 12 டன் தண்ணீரை ஏற்றக்கூடிய வகையில் வேகமும், 37௦ டன் தண்ணீரை நிரப்பும் தொட்டியும் இதில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கடல் வழி மீட்பு, காட்டு தீ அணைக்க, கடல் சூழல் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிக்கு இந்த விமானம் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.மே மாதம் இறுதியில் இந்த ராட்சத விமானம் விற்பனைக்கு வரவுள்ளது. இதுவரை 17 விமானங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.