April 29, 2016 தண்டோரா குழு
விமானத்தில் பயணம் செய்த போது கர்ப்பிணிப் பெண் ஒருவருக்குக் குழந்தை பிறந்தது. இதையடுத்து விமானத்தில் பிறந்தால் அக்குழந்தைக்கு விமானத்தின் பெயரை வைத்துள்ளார் அப்பெண்.
சிங்கப்பூரில் இருந்து பர்மாவிற்கு ஜெட்ஸ்டார் ஏசியா விமானம் புறப்பட்டுள்ளது. அப்போது விமானத்தில் பயணம் செய்த கர்ப்பிணி பெண் ஒருவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விமானத்தின் மருத்துவ குழு மற்றும் விமானத்தில் பயணம் செய்த மருத்துவரும் அவருக்கு 3 மணி நேரம் பிரசவம் பார்த்துள்ளனர்.
இதையடுத்து அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அப்பெண் தனக்கு பிரசவம் பார்த்த விமான மருத்துவக் குழுவினருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தனது குழந்தைக்கு ஷா ஜெட்ஸ்டார் எனப் பெயர் வைத்துள்ளார். இதில் வியப்பூட்டும் விஷயம் என்னவென்றால் பெண்ணின் குடும்ப பெயர் ஸ்டார் என்பதாகும்.
ஜெட்ஸ்டார் விமானத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில்,
முதலில் அவருக்கு பிரசவம் பார்த்த விமான மருத்துவ குழுவினருக்கும் உதவி செய்த மருத்துவர் பயணிக்கும் நன்றி சொல்ல வேண்டும். அக்குழந்தை பிறக்கும் சமயத்தில் நாங்கள் கை தட்டி வரவேற்றோம் ஏனெனில் விமானத்தில் பயணம் செய்யும் முதல் குறைந்த வயது நபர் அக்குழந்தை தான் என்றார்.
மேலும், பொதுவாக 4௦ வாரங்கள் கர்ப்பிணியாக உள்ள பயணிகளை விமானத்தில் பயணம் செய்ய நாங்கள் அனுமதிப்பதில்லை, 28 வாரங்களைக் கடந்தாலே மருத்துவ சான்றிதழ் பெற்றபின்பு தான் நாங்கள் அவர்களைப் பயணம் செய்ய அனுமதிப்போம்.
இது போன்ற சம்பவம் எதிர்பாராமல் நடைபெற்றதாக இருந்தாலும் இந்நிகழ்வை விமானத்தில் பயணம் செய்த யாரும் மறக்க மாட்டார்கள் எனத் தெரிவித்தார்.
விமானம் தரையிறங்கியதும் தாய் மற்றும் குழந்தையை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது மட்டுமின்றி விமானத்தின் பெயரை அக்குழந்தைக்கு வைத்ததால் 1000 டாலர் கிப்ட் வவுச்சர் ஜெட்ஸ்டார் விமானத்தின் சார்பில் அப்பெண்ணிற்கு வழங்கப்பட்டது.