May 4, 2017 தண்டோரா குழு
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் ஐ.ஐ.டி-ஜே.இ.இ தேர்வில் இந்திய அளவில் முதல் இடம் பெற்று சரித்திரம் படைத்துள்ளார்.
2௦17ம் ஆண்டிற்கான ஐ.ஐ.டி-ஜே.இ.இ தேர்வு நடைபெற்றது. அந்த தேர்வில் ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூர் நகரைச் சேர்ந்த எம்டிஎஸ் பள்ளி மாணவர் கல்பிட் வீர்வேல் என்பவர் 36௦/36௦ மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் முதல் இடம் பெற்றுள்ளார். பள்ளியிலும் பயிற்சி நிறுவனத்திலும் சிறந்து விளங்கியா இவர் ஜே.இ.இ தேர்வில் வெற்றி பெற்ற முதல் மாணவர் என்ற பெருமையும் பெற்றார்.
இதுக்குறித்து கல்பிட் வீர்வேல் கூறுகையில்,
திருத்தம், வேகம், துல்லியம் மற்றும் கவனம் செலுத்துதல் ஆகியவை தான் என்னுடைய இந்த மகத்துவமான வெற்றிக்கு காரணம். அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஜே.இ.இ தேர்வின் அடுத்த நிலை தேர்வில் கவனம் செலுத்தி வருகிறேன் என்று கூறினார்.
கல்பிட் வீர்வேலின் தந்தை உதய்பூரிலுள்ள மஹாராணா பூபல் அரசு மருத்துவமனையில் கம்பவுண்டராக பணியாற்றி வருகிறார். கல்பிட் வீர்வேலின் தாயார் அரசு பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார். ஜோத்பூரிலுள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் இவருடைய மூத்த சகோதரர் படித்துக்கொண்டு வருகிறார்.
முன்பதாக நடந்த இந்திய ஜூனியர் சயின்ஸ் ஒலிம்பியாட் போட்டியிலும், தேசிய திறமை ஆய்வு தேர்விலும் முதல் இடத்தில் இவர் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.