May 4, 2017 தண்டோரா குழு
உலகளவில் அதிகளவிலான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள மெசெஞ்சிங் ஆப்
வாட்ஸ்ஆப்.இதனை 1 பில்லியனுக்கு அதிகமான பயனாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ் ஆப் இல்லாத ஸ்மார்ட் போன்களே இல்லாத நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலை வாட்ஸ் ஆப் சிறிது நேரம் செயலிழந்தது. மெசெஜ் அனுப்பவது உள்ளிட்ட அனைத்து சேவைகளும் குறிப்பிட்ட நேரம் செயலிழந்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது. இந்திய நேரப்படி அதிகாலை 1.30 மணி முதல் 5 மணி வரை வாட்ஸ் ஆப் தற்காலிகமாக செயலிழந்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இது தான் காரணமா ?மாற்றத்திற்கான புதிய முயற்சியில் ஈடுபட்ட போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு அல்லது வாட்ஸ் ஆப் பீட்டா 2.17.140 பதிப்பை முழுமையாக கொண்டு வருவதில் நடைமுறை சிக்கல் போன்ற காரணங்களால் வாட்ஸ் ஆப் சேவை நிறுத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்தியா, கனடா, அமெரிக்கா மற்றும் பிரேசிலில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்துவதில் சிக்கல் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது வாட்ஸ் ஆப் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. எனினும் தொடர்ந்து வாட்ஸ் ஆப்பை பயன்படுத்தி நெட்டிசன்களுக்கு திடீரென வாட்ஸ் ஆப் செயலிழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது இதனால் சிறிது நேரம் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.