• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடும் மக்களை கைது செய்யக்கூடாது – உயர் நீதிமன்றம்

May 4, 2017 தண்டோரா குழு

டாஸ்மாக் மதுக்கடைகளை மூடக்கோரி போராடும் மக்களை காவல்துறை கைது செய்யக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“நெடுஞ்சாலைகளில் 500 மீட்டருக்குள் மதுபானக்கடைகள் இருக்கக் கூடாது” என்று சில மாதங்களுக்கு முன்னாள் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த அதிரடி உத்தரவால்,தமிழகத்தில் 3.303 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.

இதையடுத்து அதிக வருவாயை ஈட்டி தரும் டாஸ்மாக் கடைகளை மறுபடியும் வேறு இடங்களில் கொண்டு வர தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக டாஸ்மாக் நிர்வாகம் பல்வேறு இடங்களில் மாற்று இடங்களை தேடியது. எனினும் மக்கள் அதிக உள்ள இடங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு முயற்சி மேற்கொண்டது. தமிழக அரசின் இந்த செயலை எதிர்த்து மாநிலத்தின் பல்வேறு இடங்களில், குறிப்பாக கிராமப்புறங்களில் பொதுமக்கள், டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இதற்கிடையில் திருமுல்லைவாயில் பகுதியில் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடிய மக்களை போலீஸார் கைது செய்தனர். அவர்களை விடுவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அம்மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு இன்று வந்தது. இதனை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்,டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிராக போராடுவோரை கைது செய்வதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.”டாஸ்மாக் கடையின் விளம்பர பலகையை கிழிப்பது பெருங்குற்றமா?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடும் மக்களை கைது செய்யக்கூடாது என உத்தரவு நாளை பிறப்பிக்க உள்ளதாக நீதிபதி அறிவித்தார்.அதைபோல் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட திருமுல்லைவாயில் காவல்துறை ஆய்வாளரை நாளை ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க