May 4, 2017 தண்டோரா குழு
கமலுக்கு எதிரான வழக்கை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்து உத்தரவிட்டது.அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நடிகர் கமல்ஹாசன் பேட்டியளித்தார். அப்போது, அரசியல் சினிமா, ஆன்மிகம், திராவிடம் குறித்து பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
அதில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்து பேசும் போது இந்து மத இதிகாசங்களுள் ஒன்றான மகாபாரதத்தை மேற்கோள் காட்டி கமல் பேசியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஆதிசுந்தரம் என்பவர் தொடர்ந்த வழக்கில் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் நடிகர் கமல்ஹாசனை வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மே 5ம் தேதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கமல் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம்,வழக்கிற்கு இடைக்காலத் தடை விதிப்பதுடன்,அவர் வள்ளியூர் கோர்ட்டில் ஆஜராக தேவையில்லை என்றும் உத்தரவிட்டது.