May 5, 2017 தண்டோரா குழு
அங்கீகரிக்கப்படாத மனைகளை வரைமுறைப்படுத்துவது தொடர்பாக இரண்டு அரசாணைகளை தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.இந்த புதிய அரசாணையின்படி 20-10.16 முன் பிரிக்கப்பட்ட மனைகளை அங்கீகரிக்க அரசு ஒப்பு கொண்டுள்ளது.
அங்கீகரிக்கப்படாத மனைகளுக்கு சந்தை மதிப்பில் 3% செலுத்தினால் மனைகள் அங்கீகரித்து வரையறுக்கப்படும்.
கட்டணத்தை வரைமுறைப்படுத்த மாநகராட்சிக்கு ஒரு சதுர மீட்டருக்கு ரூ.100, நகராட்சிகளில் ரூ. 60, பேரூராட்சி, ஊராட்சிகளுக்கு ரூ. 30 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கட்டணத்தை அரசுக்கு செலுத்தினால் நிலம் வரைமுறைபடுத்தப்படும்.
தொடர்ந்து வேளாண் செய்ய தகுந்த நிலத்தை வீட்டுமனைகளாக மாற்ற அனுமதியில்லை.
உரிமம் இல்லாத காலி நிலங்களை மனையாக பதிவு செய்ய அனுமதியில்லை. விவசாய நிலமாக இருந்தால் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும்.
ஆறு, கால்வாய் உள்ளிட்ட நீர் நிலைகளை மனையாக மாற்ற அனுமதியில்லை.அரசு நிலம், கோயில் நிலங்களை மனைகளாக மாற்ற அனுமதியில்லை.