• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிரான்ஸில் ஒல்லியான பெண்கள் மாடலிங் செய்ய தடை !

May 8, 2017 தண்டோரா குழு

பிரான்ஸ் நாட்டில் ஒல்லியான பெண்கள் மாடலிங் செய்ய தடைசெய்யும் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

பேஷன் துறையில், மாடலிங் செய்ய பெண்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வரும் இந்த சுழலில் இந்த தடை சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இந்த சட்டத்தின் அடிப்படையில் தங்களது உயரத்திற்கு ஏற்றவாறு பெண்கள் சரியான எடையுடன் இருக்க வேண்டும். இதனை மருத்துவ துறையில் பி.எம்.ஐ(BMI) என குறிப்பிடுவார்கள்.

மேலும் மாடலிங் செய்யும் முன் அந்த பெண்களை மருத்துவர்கள் பரிசோதனை செய்து அவர்கள் சரியான உடல் எடையுடன் உள்ளார்களா என்று சான்றிதழ் தர வேண்டும். அதன் பின்னரே அவர்கள் மாடலிங் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த புதிய சட்டத்தை மதிக்க தவறினால், ஆறு மாதம் சிறைத்தண்டனையும், 75,௦௦௦ ஐரோஸ், இந்திய செலவாணிப்படி 5 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.

“இந்த புதிய நடவடிக்கை, சமுதாயத்தில் அழகுக்கான அணுகல் கொள்கைகளை எதிர்க்கொள்ளும் நோக்கத்தை உடையவை” என்று பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக இந்த சட்டத்திற்கு எதிராக மாடலிங் பெண்கள் போராடி வந்தனர். அதன் பின்னர் அவர்களது கோரிக்கைகளை ஏற்று சட்டத்தில் மாறுதல் கொண்டுவரப்பட்டு பின்னர் அந்நாட்டு பாராளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க