May 9, 2017 தண்டோரா குழு
விசாரணைக்கு ஆஜராகததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஜூலை10-ம்தேதி விஜய் மல்லையா நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொழிலதிபர் விஜய்மல்லையா இந்தியாவில் பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் 9000 கோடி வரை கடன் வாங்கி குறிப்பிட்ட காலத்த்தில் திரும்ப செலுத்தாமல் அமலாக்கத்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்தது. இதனால் விஜய்மல்லையா கடந்த மார்ச் மாதம் இங்கிலந்திற்கு தப்பி சென்றார்.
இந்நிலையில், மோசடி புகார் தொடர்பான வழக்கில் மல்லையா தாக்கல் செய்த ஆவணம் போலியானவை என்று வங்கி சம்மேளனம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், விஜயமல்லையா தலைமறைவான குற்றவாளி என்றும் ஜூலை 10ம் தேதி அவர் நேரில் ஆஜராகவேண்டும் என்றும் உத்தரவிட்டது.
விஜய்மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டுவர மத்திய அரசு பல்வேறு கட்ட முயற்சி மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.