சுவாமி : சௌரிராஜன், நீலமேக பெருமாள்.
அம்பாள் : கண்ணபுரநாயகி (ஸ்ரீதேவி, பூதேவி).
தீர்த்தம் : நித்யபுஷ்கரிணி.
விமானம் : உத்பலாவதக விமானம்.
தலச்சிறப்பு :
இவர் இத்தலத்தில் உற்சவராக தலையில் முடியுடன் இருக்கிறார். அமாவாசையன்று உலா செல்லும் போது மட்டுமே திருமுடி தரிசனம் காண முடியும். “சவுரி” என்ற சொல்லுக்கு “முடி” என்றும், “அழகு” என்றும் பொருள்கள் உண்டு. இக்கோவிலில் ப்ரயோக சக்ரம், உபநாச்சிமாருக்கு அப்பால், இடதுபுறம் கிரீடத்துடன் ஆண்டாளும், வலதுபுறம் பெருமாள் மணந்து கொண்ட பத்மாவதி தாயர் என்ற செம்பவாடா அரசகுமாரியும் உள்ளனர். உத்சவபெருமாள் கண்யகாதனம் வாங்க கையேந்திய நிலையில் சேவையளிகிறார். திருமங்கையாழ்வாற்கு திருமந்திர உபதேசம் செய்பட்ட ஸ்தலம். விபீஷ்ண ஆழ்வாருக்கு ஸ்ரீரங்கநாதர் அருளியபடி அம்மாவாசை தினத்தன்று பகவான் நடைஅழகை சேவைசாதித்த ஸ்தலம்.
தல வரலாறு :
ரங்கபட்டர் என்கிற அர்ச்சகர் சோழ அரசனுக்கு, பெருமாளுக்கு கேசம் வளர்ந்ததை காட்டுவதாக வாக்களித்ததை காப்பற்ற, பெருமாள் திருமுடியில் திருக்குழற்கற்றையை வளர்த்து கேசத்தை காட்டி அருளியதால் செளரிராஜன் என்ற பெயர் உண்டாயிற்று. முனையதரையர் என்ற மஹாபக்திமான் தாமுடைய பத்தினி சமைத்த பொங்கலை நடு இரவிற்கு பிறகு கோவிலுக்குல் செல்ல முடியாமல் மானசீகமாக பக்தியுடன் சமர்ப்பித்ததை பகவான் திருஉள்ளம் பற்றியதால், மூடிய கோவிலில் மணியோசை கேட்டு வெண்பொங்கல் வாசனை நிரம்பியதால் அது முதல் இரவில் தரும் பொங்கலுக்கு “முனியோதரம் பொங்கல்” என்ற பெயர் ஏற்ப்பட்டது. இன்றளவும் வெண்ணெய் உருக்கி பொங்கல் செய்து பெருமாளுக்கு நிவேதனம் செய்வது வீசேசம்.
நடைதிறப்பு : காலை 7.00 மணி முதல் பகல் 12.15 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை.
பூஜைவிவரம் : ஆறுகால பூஜைகள்.
திருவிழாக்கள் :
வைகாசி – பிரம்மோற்சவம் 13 நாட்கள் 7ம் திருநாள் பத்மினிதாயாருடன் திருக்கல்யாண உற்சவம்,
ஆடி – வளர்பிறையில் ஏகாதசி அன்று பெருமாளுக்கு கவசம் கலைந்த நிலையில் ஜேஷ்டாபிஷேகம்,
மாசி – மாசிமகம் உற்சவம் 15 நாட்கள் மாசி மகத்தன்று 25 கி.மீ. தொலைவிலுள்ள திருமலைராயன்பட்டிணம் சென்ற கருடவாகனத்தில் தீர்த்தவாரி.
இந்த தீர்த்தவாரியை புதுவை அரசும், திருக்கோயிலும் இணைந்து நடத்தும் விழா. பெருமாள் கருடவாகனத்தை மீனவர்கள் சுமந்து வருவர்.
அருகிலுள்ள நகரம் : திருவாரூர்.
கோவில் முகவரி : அருள்மிகு செளரிராஜ பெருமாள் திருக்கோவில்,திருக்கண்ணபுரம்- 609 704, திருவாரூர் மாவட்டம்.
தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் தமிழகத்திலும் கேரளாவிலும் ப்யூர் பவர் அறிமுகம்
கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் தன ஆகர்ஷன மகாலட்சுமி குபேரர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு
சத்குருவின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து!
தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் கோவை மத்திய மாவட்ட பொதுக்குழு கூட்டம்
தர்ட் ஐ அமைப்பின் ஆட்டிசம் விழிப்புணர்வு காணொளியை வெளியிட்ட நடிகை கெளதமி
ஆகாஷ் நிறுவனம் சார்பாக ஜே.இ.இ. தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்த ஆகாஷ் இன்விக்டஸ் எனும் புதிய பாடத்திட்டம் கோவையில் அறிமுகம்