May 10, 2017 தண்டோரா குழு
பிள்ளைகளின் படிப்பிற்காக பகலில் போக்குவரத்து காவலராகவும், இரவில் ஆட்டோ டிரைவராகவும் ஓய்வின்றி உழைத்து வருகிறார் ஜாவித்கான்.
ஹைதராபாத்தை சேர்ந்தவர் போக்குவரத்து காவலரான ஜாவித்கான். இவருக்கு நான்கு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார். இவரது மூத்த மகள் மகள் ஷாஹீன் பாத்திமா படிப்பில் படுகெட்டி. இவர் பிபிஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சிஏ படிக்க வேண்டும் என்கிற கனவில்கல்லூரி படித்து வருகிறார். ஆனால், சி.ஏ பயிற்சி வகுப்பிற்கு சேரவேண்டும் என்றால் அதற்கு 54 ஆயிரம் செலவாகும். ஆனாலும், அப்பா வாங்கும் சம்பளம் அத்தியாவசியமான தேவைகளுக்கே போதாத நிலை.
அதே நேரத்தில் பெண் குழந்தையின் கல்வி தான் மாற்றத்தை உருவாக்கும் என்ற கொள்கையில் உறுதியாக இருக்கும் ஜாவித் மகளின் படிப்பு பொருளாதார சூழலால் தடைபட்டு விடக்கூடாது என்பதில் தீர்க்கமாக இருந்து வருகிறார். இதற்காக, பகலில் போக்குவரத்து காவலராக பணியாற்றி வரும் ஜாவித் இரவில் ஆட்டோ ஓட்டி சம்பாதித்து வருகிறார்.
தினமும் காலை 7 மணி முதல் 3 மணிவரை போக்குவரத்து காவலர் பணி. அரை மணி நேரம் ஓய்வெடுத்த பிறகு இரவு 2 மணி வரை ஆட்டோ ஓட்டி வருகிறார். நான்கு மணி நேரத்தூக்கம் என அன்றாட வாழ்க்கையைக்உழைப்பால் கழித்து வருகிறார் ஜாவித். அவரது மனைவியும் வீட்டில் இருந்த படியே எம்பராய்டு தொழில் செய்து குடும்பத்தை கவனித்து வருகிறார்.
‘எனது மகள்களின் படிப்பிற்காக கடுமையாக உழைப்பதற்கு பெருமைப்படுகிறேன்’ எனது மகளின் படிப்பிற்காக சிலர் உதவி செய்து வருகின்றனர். அதே நேரத்தில் அரசு ஊர் காவல் படைக்கு பணி நிரந்தரம் செய்வதாக கூறியுள்ளது அப்படி பணி நிரந்தரம் கிடைக்கும் பட்சத்தில் அது எனக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார். மேலும்,கடின உழைத்தாலும் அது போதுமானதாக இல்லை என வருத்தம் கொள்கிறார் ஜாவித்கான்.
சைபாபாத் காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலராக 17 ஆண்டுகள் பணியாற்றி வரும் ஜாவித் ஆரம்பத்தில்,6000 ரூபாய் சம்பளத்தில் தனது பணியை துவங்கி தற்போது12,000 ரூபாய் சம்பாதித்து வருகிறார். இது போக ஆட்டோ ஓட்டுவதன் மூலம் தினமும் 300 ரூபாய் சம்பாதித்து வருகிறார்.
ஜாவித்கான் உதவுபவர்கள் அவரது தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். 9705281789.