• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

போப்பாண்டவர் உதட்டில் டிரம்ப் முத்தமிடுவது போல் ஓவியம் !

May 12, 2017

போப்பாண்டவர் பிரான்சிஸ் உதட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முத்தமிடுவது போல் ஒரு சுவர் ஓவியம் வாடிகன் நகரின் நுழைவாயிலில் வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த ஓவியத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தலையில் இரண்டு கொம்புகள் இருப்பது போலவும், இடுப்பில் துப்பாக்கி வைத்திருப்பது போலவும் உள்ளது. அதே போல் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் தலையை சுற்றி ஒளி வட்டம், கழுத்தில் சிலுவை பதித்துள்ள சங்கிலியை அணிந்திருப்பது போலவும் உள்ளது.

இந்த ஓவியம் அங்குள்ள திபர் ஆற்றின் அருகிலுள்ள வே ஆப் தி பேங்க் ஆப் ஹோலி ஸ்பிரிட் என்னும் தெருவின் சுவற்றில் வரையப்பட்டிருந்தது. “நன்மை தீமையை மன்னிக்கும்”‘ என்றும் இந்த ஓவியத்திற்கு தலைப்பு தரப்பட்டிருந்தது.

மேலும் அதில் டிவிபாய் என்று கையொப்பம் இடப்பட்டிருந்தது. இத்தாலிய நாட்டின் தெரு ஓவியர் சல்வடோர் பெநின்ட்டேன்டே என்பவரால் இந்த ஓவியம் வரையப்பட்டிருக்கும் என்று கருதப்படுகிறது.

“இந்த ஓவியம் பார்ப்பவர்களுக்கு எரிச்சலுட்டும் விதமாக இருந்தது. ஆனால் அமெரிக்காவிலிருந்து வருபவர்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக இல்லை”” என்று கலிபோர்னியாவின் புர்பான்க் சுற்றுலா பயணி விக்டர் என்பவர் தெரிவித்தார்.

சவூதி அரேபியா, இஸ்ரேல், பெல்ஜியம் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு டிரம்ப் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். போப் பிரான்சிசை டிரம்ப் மே மாதம் 24-ம் தேதி சந்திக்கவுள்ளார்.

டிரம்ப் இத்தாலி நாட்டிற்கு வர இரண்டு வாரத்திற்கு முன்பு இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க