• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

16 மணிநேரம் உணவில்லாமல் தவித்த பயணிகள்

May 12, 2017 தண்டோரா குழு

ராஞ்சி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலின் கேட்டரிங் ஊழியர்கள் சிலர் ரயிலில் இருந்து எந்த வித தகவலும் தெரிவிக்காமல் இறங்கிவிட்டதால், அதில் பயணித்த பயணிகள் 16 மணி நேரம் உணவில்லாமல் அவதிப்படும் நிலை ஏற்பட்டது.

ராஞ்சி ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் புதுதில்லி ரயில் நிலையத்திலிருந்து ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சிக்கு இடையே இயக்கப்படுகிறது. இந்த ரயில் 16 மணி நேரம் பயணிக்கிறது. இந்த ரயிலின் கேட்டரிங் ஊழியர்கள் எந்த தகவலும் தெரிவிக்காமல் ரயில் கிளம்பும் போது இறங்கிவிட்டனர். இதனால் 16 மணிநேரம் உணவில்லாமல் பயணிகள் அவதிப்பட்டனர்.

புதன்கிழமை மாலை புதுதில்லி ரயில் நிலையதிலிருந்து கிளம்பிய எக்ஸ்பிரஸ், இரவு 9:3௦௦ மணியளவில், கான்பூர் ரயில் நிலையத்திற்கு சென்றது. கோபம் அடைந்த பயணிகள் உணவு பெட்டியில்(Pantry Car) இருந்த உணவுகளை எடுத்துக்கொண்டனர். வேறு சிலர், ரயில் நிலையங்களில் விற்பனைக்கு கொண்டு வரும் உணவு விற்பனையாளர்களிடம் இருந்து உணவுகளை பெற்றுக்கொண்டனர்.

இது குறித்து பயணிகள் கூறுகையில்;

“குடிப்பதற்கு தண்ணீர் வேண்டுமென்று பல முறை ஊழியர்களை கேட்ட பிறகும், எங்களுக்கு யாரும் தண்ணீர் தரவில்லை”” என்று அதில் பயணித்த மூதாட்டி கூறினார்.

“குடிப்பதற்கு தண்ணீரும் இல்லை, தேநீரும் இல்லை. கான்பூரில் இரவு உணவு வழங்கப்படும் என்றிருந்தது, அதுவும் நடக்கவில்லை”” என்று மற்றொரு பயணி தெரிவித்தார்.

ராஜதானி எக்ஸ்பிரஸ் வியாழக்கிழமை(மே 11) மதியம், ராஞ்சி ரயில் நிலையத்தை அடைந்ததும் தென் கிழக்கு ரயில்வே அதிகாரிகளிடம், பயணிகள் தங்களுடைய ஆதாங்கத்தை கூறினார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய மூத்த வணிகப்பிரிவு மேலாளர், நீரஜ் குமார் கூறுகையில், “ராஜதானி எக்ஸ்பிரஸின் கேட்டரிங் சேவை வடக்கு ரயில்வேயின் கீழ் உள்ளது. இச்சம்பவம் குறித்து எங்களுக்கு தாமதமாக தான் தெரிய வந்தது. இது முன் சம்பவிக்காத சம்பவம் ஆகும். இது போன்று மீண்டும் நடக்காமல் இருக்க பார்த்துக்கொள்வோம்.” என்றார்.

ராஜதானி மற்றும் ஷாடபடி எக்ஸ்பிரஸின் ஒவ்வொரு பெட்டியிலும் இரண்டு ஊழியர்கள் இருப்பது வழக்கம். ராஞ்சி ராஜதானி எக்ஸ்பிரஸில் 17 பெட்டிகள் உள்ளன. சம்பவத்தன்று, 17 ஊழியர்கள் தான் பணிக்கு வந்தனர். ஏற்கனவே பெட்டியிலிருந்த ஊழியர்கள் புதுதில்லி ரயில் நிலையத்தில் இருந்து ரயில் கிளம்புவதற்கு முன்பாக இறங்கிவிட்டனர். இது குறித்து விசாரணை செய்து வருகிறோம்” என்று ரயில்வே மேலாளர் குட்டு சிங் தெரிவித்தார்.

மேலும் படிக்க