May 13, 2017 தண்டோரா குழு
சீனா மாணவர்களால் சந்திரனில் வாழ்வது போல் உருவாக்கப்பட்டது ‘லூனார் பேலஸ்’. விண்வெளி வீரர்களின் உடல் நிலை குறித்து சோதனை செய்ய இந்த பேலஸ் உருவாக்கப்பட்டுள்ளது.
சந்திரனை போன்ற சூழலில் அமைக்கப்பட்ட ‘லூனார் பேலஸில்’ மாணவர்கள் இரு பிரிவுகளாக பிரிந்து ஓர் ஆண்டு காலம் வசிப்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்கால விண்வெளி வீரர்கள் நீண்ட நாட்கள் விண்வெளியில் வாழ உதவும் உயிர் காக்கும் கருவி ஒன்றை சோதனையிட வேண்டியுள்ளது. அதற்காக சீன மாணவர்கள் ஒரு ஆண்டு காலம் அதில் தங்கி சோதனை செய்வார்கள் என பல்கலைகழக நீர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த சோதனைக்கு ‘யுகாங் 365’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு, இதே போன்று ஒரு சூழல் உருவாக்கி அதில் பயோ ரேஜெனரடிவ் லைப் சப்போர்ட் சிஸ்டம்(BLSS) எப்படி செயல்படுகிறது என்பதை கண்டறிய சுமார் 1௦5 நாட்கள் சோதனை நடைபெற்றது. அந்த சோதனை வெற்றியடைந்தது. அந்த சோதனையின் இரண்டாவது முயற்சி இதுவாகும்.
இதுக்குறித்து பெயஹாங் பல்கலைக்கழகம் நிர்வாகம் கூறுகையில்
“எட்டு முதுக்கலை மாணவர்களை இரண்டு குழுவாக பிரித்து இந்த சோதனைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முதல் குழு மாணவர்கள் 6௦ நாட்கள் அதில் வசிப்பர்கள். அதன் பிறகு இரண்டாவது குழு மாணவர்கள் 2௦௦ நாட்கள் அதில் வசிப்பர்கள். மீண்டும் முதல் குழு மாணவர்கள் 1௦5 நாட்கள் அதில் வசிப்பர்கள்.
அவர்கள் தங்கும் இடம் நகர்புற குடியிருப்பு போன்று இருக்கும். நான்கு படுக்கை அறை, ஒரு முன்னறை, விலங்குகளை தங்க வைக்கும் இடம், மறுசுழற்சி அரை, ஒரு கழிவறை அந்த ‘லூனார் பேலஸில்’ இருக்கும்” என்றது.
“சீனா விண்வெளி வீரர்கள் செவ்வாய் மற்றும் சந்திரனுக்கு எதிர்காலத்தில் செல்ல இந்த சோதனை இன்றியமையாதது” என்று சீன அறிவியல் அகாடமி தலைவர் லியு ஷியங் கூறியுள்ளார்.