May 13, 2017 தண்டோரா குழு
கோவை டி.வி.எஸ் காலனி வழியாக செல்லும் மேட்டுப்பாளையம் சாலையில் அவினாசிலிங்கம் யுனிவர்சிட்டி சிக்கனல் அருகே குண்டும் குழியுமாக உள்ள சாலை. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிகுள்ளாகி வருகின்றனர்.
கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் நாள்தோறும் பல லட்சம் வாகனங்கள் செல்கின்றன. இதில் அதிகப்படியாக இருசக்கர வாகனங்கள் காணப்படுகிறது.
இந்நிலையில் அவினாசிலிங்கம் யுனிவர்சிட்டி சிக்கனல் அருகே உள்ள சாலை குண்டும் குழியுமாக உள்ள காரணத்தினால் இரு சக்கர வாகனம் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவ்வழியாக செல்லும் பள்ளி மணாவர்கள், கல்லூரி மாணவிகள் , பொது மக்கள் என அனைத்து தரப்பும் பாதிப்படைந்துள்ளனர்.
சிக்கனல் அருகே உள்ள அந்த பள்ளம் சிக்கனில் காத்துக்கொண்டிருக்கும் வாகன ஒட்டிகளுக்கு பெரும்பாலும் தெரிவதில்லை. பச்சை சிக்கனல் போட்டவுடன் வேகமாக செல்லும் வாகனங்கள் அந்த பள்ளத்தை பொருட்படுத்தாமல் செல்வதால் சில சமயம் சிலர் கிழே சாலையில் விழுந்து காயம் ஏற்படுகின்றது. மற்றும் சிலருக்கு வாகனம் பள்ளத்தில் செல்லும் போது பழுது ஏற்பட்டு நின்று விடுகிறது. இதனால் பின்னாடி வரும் வாகனங்கள் மோதும் மோசமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதனை மாநகராட்சி அதிகாரிகள் சீர் செய்ய வேண்டும் என அவ்வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை நகரம் வழியாக செல்லக்கூடிய சாலைகள் பெரும்பாலும் இவ்வாறு இருப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.