May 13, 2017
தண்டோரா குழு
சென்னை மாநகர காவல் ஆணையராக ஏ.கே.விஸ்வநாதனை நியமனம் செய்து தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது.
சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த ஜார்ஜ் ஆர்கே நகர் இடைத்தேர்தலின் போது பணி இடமாற்றம் செய்யப்பட்டார். அவரது இடத்தில் கரண் சின்ஹாவை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்திரவிட்டது.
இந்நிலையில், சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக ஏ.கே.விஸ்வநாதனை நியமனம் செய்து தமிழக அரசு உத்திர விட்டுள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த கரண் சின்ஹா சீருடைபணியாளர் தேர்வு வாரியத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஏ கே விஸ்வநாதன் கோவை மாநகர காவல் ஆணையாளர், சென்னை மாநகர கூடுதல் ஆணையர்(சட்டம் ஒழுங்கு) காவல் துறை கூடுதல் தலைவர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகள் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.