May 15, 2017 தண்டோரா குழு
முத்தலாக் விவாகரத்து முறையை ரத்து செய்தால் புதிய சட்டம் கொண்டுவர தயாராக இருப்பதாக மத்திய மத்திய அரசின் வழக்கறிஞர் முகுல் ரோகத்கி உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இஸ்லாமியர்களின் முத்தலாக் குறித்த வழக்குஉச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில், இன்றைய விசாரணையில், தலாக் நடைமுறை இஸ்லாமின் ஒரு அங்கமாக இருந்தால் அதனை தாங்கள் ரத்து செய்ய முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் அரசியல் சாசனத்திற்கு மட்டுமல்ல.
சிறுபான்மையினருக்கும் பாதுகாவலாக திகழ்கிறது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.அப்போது, இது குறித்து வாதிட்ட மத்திய அரசு வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, திருமணம் மற்றும் திருமண முறிவு என்பது மதம் சார்ந்த விஷயமல்ல எனவும் இஸ்லாம் மதத்தில் தலாக் கூறி மண முறிவு பெறும் வசதி ஆண்களுக்கு மட்டுமே உள்ளது, பெண்களுக்கு இல்லை எனவும் வாதிட்டார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள்அவரிடம் சில கேள்விகளை எழுப்பினர். முத்தலாக் முறை ஒழிக்கப்பட்டால் திருமணமான ஒரு இஸ்லாமியர் தனது மனைவியிடம் இருந்து மணவிலக்கு பெற சட்டப்படி மாற்று என்ன? என்ற கேட்டனர்.
இதற்கு பதிலளித்த முகுல் ரோஹத்கி, முத்தலாக் முறையை செல்லாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்தால் இஸ்லாமிய திருமணங்கள் மற்றும் விவாகரத்து தொடர்பாக புதிய சட்டத்தை இயற்ற மத்திய அரசு தயாராக உள்ளதாக தெரிவித்தார்.