• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாட்டி, அம்மா, பேத்திக்கு பட்டம் !

May 16, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவில் ஒரே குடும்பத்தில் மூன்று தலைமுறையை சேர்ந்த ஐந்து பெண்கள் பட்டம் பெற்றுள்ளனர்.

அமெரிக்கா இல்லினோயிஸ் மாநிலத்தின் சிகாகோ நகரில் வசிப்பர் லா வாண்டா ப்லேன்னாய். அவருக்கு இரண்டு மகள்களும் ஒரு பேத்தியும் உள்ளனர்.

இல்லினோயிஸ் பல்கலைக்கழகத்தில் அவருடைய மூத்த மகள் அமாரி தொழில்துறை பொறியியல் பாடத்தில் பட்டம் பெற்று போர்ட்ஸ் மோட்டார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.

அவருடைய இரண்டாவது மகள் பாரிஸ் சிகாகோ மாநில பல்கலைக்கழகத்தில் பொது தொடர்பு பாடத்தில் பட்டம் பெற்று, ஆப்பிள் நிறுவனத்தில் பணிபுரிய போகிறார். அவருடைய மூன்றாவது மகள் தனது மேல்நிலை பள்ளியை முடித்துவிட்டு, இல்லினோயிஸ் மாநில பல்கலைக்கழகத்தில் சேர்ந்து குற்றவியல் நீதி படிப்பை மேற்கொள்ளவுள்ளார்.

வாண்டாவின் பேத்தி ப்ரூக்ளின் தனது மழலை பள்ளியில் பட்டம் பெற்றுள்ளார். லா வாண்டா ப்லேன்னாய் தென் நகர்ப்புற கல்லூரியிலிருந்து உளவியல் பாடத்தில் இம்மாத கடைசியில் பட்டம் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டம் பெற்ற தன்னுடைய மகள்கள் மற்றும் பேத்தியை அவர்கள் அணிந்திருந்த பட்டமளிப்பு உடையுடன் புகைப்படம் எடுக்க திட்டமிட்டார் வாண்டா, ஆனால் அந்த புகைப்படத்தில் அவரும் இருக்க வேண்டும் என்று அவருடைய பிள்ளைகள் விரும்பினார். அவர்கள் விருப்பத்திற்கு இணங்க அவர்களுடன் அவரும் புகைப்படம் எடுத்தார்.

“இந்த புகைப்படம் எனக்கு இரண்டு காரணங்களுக்காக பெருமை தருகிறது. முதலாவது, என்னுடைய மகள்களுக்கு ஒரு நல்ல உதாரணமாக இருந்துள்ளேன் என்பதை காட்டுகிறது. இரண்டாவது, அவர்களுடைய கனவை நனவாக்கியுள்ளனர். இதை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என் மகள்களை பார்க்கும்போது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.

அவர்கள் தங்கள் எதிர்காலத்தில் என்னவாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்களோ, அவ்வாறே ஆக முடியும். நல்ல கல்வி மற்றும் தளராத நம்பிக்கை வெற்றியுள்ள வாழ்க்கைக்கு நல்ல அடித்தளம் என்று நான் அவர்களுக்கு எப்பொழுதும் சொல்வதுண்டு. உறுதிபாடு, கவனம், மற்றும் நல்ல ஆதரவு இருந்தால், ஒருவரால் எதையும் சாதிக்க முடியும்” என்றார்.

புகைப்படத்தை எடுத்த ஹம்மொந்த் என்பவர் கூறுகையில், “அனைவரும் க்ரீம் நிற உடை அணிந்து முகத்தில் சிரிப்புடன் காணப்பட்டார்கள். ஒருவர் பட்டம் பெற்றாலே அது ஒரு பெரிய சாதனை. ஆனால் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் பட்டம் பெறுகிறார்கள் என்றால் அது ஒரு புதிய சாதனை. பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர், அவர்களை நல்ல முறையில் கல்வி கற்று, தங்களுடைய கனவை நனவாக்க அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இந்த புகைப்படத்தை பார்த்த பலரை கவர்ந்துள்ளது” என்றார்.

மேலும் படிக்க