May 16, 2017
தண்டோரா குழு
கபாலி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் ரஜினி தவிர, படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகைகள் பற்றி எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில், ரஜினியின் 161வது படத்தில் பாலிவுட் நடிகை ‘ஹுமா குரேஷி’ நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் இதைப்பற்றி படக்குழுவினரிடமிருந்து விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மே 28ம் தேதி தொடங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.