May 18, 2017 தண்டோரா குழு
மேட்டுப்பாளையம் அறிவொளி நகர் பகுதியில் 10 நாட்களாக குடிநீர் வரவில்லை எனக் கூறி அதிகாரிகளை கண்டித்து 100-க்கும் மேற்பட்ட பொது மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை பகுதியில் கடந்த சில நாட்களாகவே குடிநீர் சரிவர வழங்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுக்குறித்து பல முறை அவர்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர். நடவடிக்கை எடுப்பதாக கூறும் அதிகாரிகள் இதுவரை சரிவர குடிநீர் வழங்கப்படவில்லை.
இதனிடையே இன்று சிறுமுகை அறிவொளி நகர் பகுதியை சார்ந்த பொதுமக்கள் திடிரென மேட்டுப்பாளையம்-சிறுமுகை சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் சுமார் அந்த சாலையில் 1 மணி நேரம் வரை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மேட்டுப்பாளையம் வட்டாச்சியர் ரங்கராஜ் காவல் ஆய்வாளர் சுகவனம் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சுமார் 20நிமிடம் நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனிடையே சாலை மறியலை சீர்செய்ய மேட்டுப்பாளையம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பொன்ராஜ்,வள்ளுவன்,கிறிஸ்டோபர்,கருப்பையன்,வெள்ளிக்கிரி தனிப்பிரிவு காவலர்கள் கண்ணன்,ராஜ் ஆகியோர் ஈடுபட்டனர்.