May 18, 2017 தண்டோரா குழு
ஆஸ்திரேலியோவில் உள்ள பூனை ஒன்று உலகின் நீளமான பூனையாக தேர்ந்தெடுக்கப்பட்டு கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் மெல்பெர்ன் நகரில் வசிக்கும் ஸ்டீபன் ஹிர்ஸ்ட் என்பவருக்கு மெயின் கூன் இனத்தை சேர்ந்த பூனை ஒன்றை வளர்த்து வருகிறார். அதனுடைய பெயர் ஓமர்.
“ஓமர் 12௦ சென்டி மீட்டர் நீளமும் 14 கிலோ எடையையும் கொண்டது.இந்த பூனை மாமிசத்தை மட்டுமே விரும்பி சாப்பிடுகிறது. ” டாக் கிரேட் ” என்னும் ஒரு வகை வாகனத்தை பயன்படுத்தி தான் கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறோம்.
முழுபடுக்கையும் ஓமருக்கே சரியாக இருப்பதால், மற்றவர்கள் படுக்க முடிவதில்லை. அதனால், இரவு நேரங்களில் படுக்கை அறைக்கு வெளியே அனுப்பி விடுகிறோம்” என்று ஸ்டீபன் ஹிர்ஸ்ட் தெரிவித்தார்.தற்போது இந்தப் பூனை உலகின் மிக நீளமான பூனையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.