May 18, 2017 தண்டோரா குழு
சுமார் 15௦ நாடுகளுக்கு பரவிய கணினி வைரஸ் ‘ரான்சம்வேர்’ தாக்குதல் தற்போது குறைந்துள்ளது. சர்வதேச அளவில் புதிய தாக்குதல் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
கணினியில் பணிபுரியும் ஊழியர்கள் ஜாக்கிரதையாக இருக்குமாறு பல நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கணினி பயனாளர்களின் பாதுக்காப்பான கோப்புகளை அது எடுத்துவிடுகிறது. அதனை திரும்ப தர சுமார் 3௦௦ டாலர்(23௦ பவுண்ட்) அந்த வைரஸ் கேட்கிறது.
“இந்த தாக்குதலால் ஆயிரக்கணக்கான கணினிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இப்போது விழிப்புடன் செயல்பட வேண்டும்.” என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜெர்மனி நாட்டின் ரயில் வலையமைப்பான டியூஸ்சே பாஹ்ன், ஸ்பெயினின் தொலைத்தொடர்பு இயக்குனர் டெலிபோனிகா, அமெரிக்காவின் பெட்எக்ஸ் மற்றும் ரஷ்யாவின் உள்துறை அமைச்சகம் ஆகியவையை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது ரான்சம்வேர் வைரஸ். மீண்டும் தாக்குதல் ஏற்படக்கூடாது என்று பல நிறுவங்கள் நிபுணர்களை நியமித்துள்ளனர்.
ஐரோபோல் நிறுவனத்தின் மூத்த செய்தி தொடர்பாளார், ஜான் ஆப் ஜென் ஊர்த் கூறுகையில்,
“ இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாகவில்லை. ஐரோப்பா முழுவதும் நிலையாகவே இருக்கிறது. இதுவே ஒரு வெற்றியாகும்” என்றார்.