May 22, 2017
tamilsamayam.com
பிரபல மலையாள திரையுலகின் காதல் மன்னனான துல்கர் சல்மான், இம்மாத தொடக்கத்தில் பிறந்த தனது பெண் குழந்தைக்கு அழகான பெயரை சூட்டியுள்ளார்.
மெகாஸ்டார் மம்மூட்டியின் மகனான துல்கர் சல்மானுக்கும், சென்னையை சேர்ந்த வட இந்திய இஸ்லாமிய பெண்ணான அமல் சுபியாவுக்கும் கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், சுமார் 5 ஆண்டுகள் கழித்து துல்கர்-அமல் தம்பதிக்கு கடந்த மே 5ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அழகான பெண் குழந்தை பிறந்தது.
தற்போது, அமல்-துல்கர் தங்களது குட்டி தேவதைக்கு ‘மரியம் அமீரா சல்மான்’ என்ற பெயரை வைத்துள்ளனர். தற்போது ‘சோலோ’ படத்தில் நடித்து வரும் துல்கர் தனது மகளின் பெயரை கிரீட்டிங் கார்ட் வழங்கி, படக்குழுவுக்கு விருந்து வைத்து அமர்க்களம் செய்துள்ளார். அந்த கிரீட்டிங் கார்டு தற்போது ஸ்மூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.