May 22, 2017
தண்டோரா குழு
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்க திட்டமிட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஈரோடு மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
இந்த ஸ்மார்ட் கார்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டால் பள்ளிகளில் மாற்று சான்றிதழ் முறைக்கு தேவை இருக்காது என்றும், இந்த ஸ்மார்ட் கார்டில் மாணவர்களின் புகைப்படம், ரத்த வகை, முகவரி, குடும்ப விவரம், ஆதார் விவரம் இடம்பெற்றிருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் இந்த ஸ்மார்ட் கார்டு கல்வித்துறையில் டிஜிட்டல் வளர்ச்சிக்கான நகர்வு எனவும், ஸ்மார்ட் கார்டுகளை பயன்படுத்தி மாணவர்களின் தேர்வு மதிப்பெண்கள் போன்றவற்றை அறிந்து கொள்ளலாம், என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.