May 24, 2017 தண்டோரா குழு
தொழில்நுட்பத்தில் முதன்மை இடத்தை பெற நாளை முதல் போலீஸ் ரோபோக்களை ரோந்துப் பணியில் ஈடுபடுத்த துபாய் காவல்துறை முடிவு செய்துள்ளது.
விஞ்ஞான உலகில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் ரோபோக்ககளை பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தொழில்நுட்பத்தில் முதன்மை இடத்தை பெற நாளை முதல் போலீஸ் ரோபோக்களை ரோந்துப் பணியில் ஈடுபடுத்த துபாய் காவல்துறை முடிவு செய்துள்ளது.
அரபு, ஆங்கிலம் உள்பட 6 மொழிகளில் தொடர்பு கொள்ளகூடிய இந்த ரோபோவின் மார்பின் மீது தொடு திரை மூலமாக மக்கள் அபராதம் செலுத்துவது, மற்றும் தகவல்களைப் பெறுவது போன்ற சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம். இதுமட்டுமின்றி ரோபோவின் கண்கள் எதிரில் உள்ளவரின் உணர்வுகள், சைகைகள் கண்டறியும் வகையிலும், முகங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு ஏதுவாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதைபோல் ரோபோவிடம் உள்ள வரைபடமும் கண்களில் உள்ள கேமராவும் கால்களில் உள்ள சக்கரங்களும்,ரோபோ தடைபடாமல் சரியாக செல்ல உதவுகிறது.கூகுள் மற்றும் ஐ.பி.எம் வாட்சனின் உதவியுடன் இந்த ரோபோவை வடிவமைத்துள்ளதாக தெரிவித்துள்ள துபாய், இந்த ரோபோ காவல்துறைக்கு ஆயுதங்கள் ஏதும் வழங்கப்படாது என தெரிவித்துள்ளது.முதலில் இந்த ரோபோக்களின் செயல்திறன்கள் சுற்றுல்லாத்தளங்களிலும், மால்களிலும் பரிசோதிக்கப்பட உள்ளது.
படைப்பகுதித் தலைவர் மற்றும் துபாய் காவல்துறையின் நவீன சேவைப் பிரிவின் தலைமை அதிகாரியுமன, காலித் நாசர் அல் ரசூகி கூறும்போது,
உலகிலேயே முதன்முதலில் இந்த ரோபோ போலீசை அறிமுகப்படுத்துவது, உலகநாடுகளில் தொழில்நுட்ப வளர்ச்சியில் முதன்மையான இடத்தைப் பெறும் முயற்சியில் முக்கியமான மைல் கல்லாக அமையும் எனக் கூறினார்.