May 25, 2017 தண்டோரா குழு
சூர்யா உள்ளிட்ட 8 பேர் மீதான பிடிவாரண்டுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
கடந்த, 2009ம் ஆண்டு நடந்த, நடிகர்கள் சங்கக் கூட்டத்தில், பத்திரிகையாளர்களின் சமூக தகுதியை குறைக்கும் வகையிலும், மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையிலும் பேசியதாக, உதகையை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் உதகை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இந்த வழக்கில் நடிகர் சூர்யா, சரத்குமார், சத்யராஜ், ஸ்ரீபிரியா, விவேக், விஜயகுமார், இயக்குனர் சேரன், அருண் விஜய் ஆகியோர் விசாரணைக்கு நேரில் ஆஜராகாத காரணத்தால் அவரகளுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உதகை நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையடுத்து, நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க பிடிவாரண்டுக்கு எதிரான 8 நடிகர்களும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.இம்மனுவை இன்று விசாரித்த நீதிபதி 8 நடிகர்கள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.மேலும், ஜூன் 17ஆம் தேதிக்குள் 8 நடிகர்களும் ஆஜராக உதகை நீதித்துறை நடுவர் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் உதகை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு இடைக்கால தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.