May 27, 2017 தண்டோரா குழு
கீழடியில் அகழாய்வுப் பணிகள் முடிந்த பின்னர் அங்கு அருங்காட்சியகம் அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று மத்திய தொல்லியல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீராம் கூறியுள்ளார்.
இதுக்குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;
“மதுரை அருகே உள்ள கீழடியில் இன்று (மே – 27) மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.இந்த பணிகள் செப்டம்பர் 30-ம் தேதி வரை நடைபெறும்.
இந்த ஆய்வில் கிடைக்கும் பொருட்களை முறையாக ஆய்வு செய்த பிறகே முடிவுகளைப் பற்றிக் கூற முடியும்.அகழாய்வுப் பணிகள் முழுமையாக முடிந்தபின்னர் கீழடியில் அருங்காட்சியகம் அமைப்பது குறித்துப் பரிசீலிக்கப்படும்.
மத்திய அரசின் நிதியுதவியால்தான் ஆராய்ச்சிப்பணிகள் நடைபெறுகின்றன. மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் முழு ஒத்துழைப்பை அளிக்கின்றன. கீழடியில் ஊர் மக்களுக்கும் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.”
இவ்வாறு அவர் கூறினார்.