May 6, 2016 தண்டோரா குழு
தலைக் கவசம் அணியாமல் கார் ஓடிய ஒருவருக்கு அபராதம் விதித்தார் போக்குவரத்து காவல் அதிகாரி.
இந்த வேடிக்கையான சம்பவம் கோவா மாநிலத்தில் நடந்தது. கிழக்கு கோவாவில் உள்ள கடலோர பகுதியான கோல்வா என்னும் இடத்தில் காவல் துணை ஆய்வாளராகப் பணிபுரியும் எஸ்.எல். ஹுனஷிகட்டி.
இவர் அப்பகுதியில் பணியில் இருந்தபோது, ஏக்நாத் ஆனந்த் பல்கர் என்பவர் காரில் சென்றுள்ளார். அப்போது அவரைச் சோதனை செய்த துணை ஆய்வாளர் தலை கவசம் அணியாமல் சென்றதாக பல்கருக்கு அபராதம் விதித்தார். இது பின்னர் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
மோட்டார் வாகன சட்டம் 177 கீழ் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் போது தலை கவசம் அணியாமல் சென்றால் கண்டிப்பாக அபராதம் செலுத்த வேண்டும். இதன் அடிப்படையில் தான் திரு பல்கர் அபராதம் செலுத்த வேண்டி உள்ளது.
இது குறித்து உயரதிகாரிகள் கூறும்போது, வேறு சில குற்றங்களையும் இந்தப் பிரிவின் கீழ் கொண்டுவர முடியும். இதனால் தான் சிறிய பிழை ஏற்பட்டு இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர். மேலும், மோட்டார் வாகன சட்டம் 177 கீழ் சரியான ஓட்டுநர் உரிமம் இல்லாமல் பயணிப்பவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க முடியும் எனவும் தெரிவித்தார்.
சரியான ஓட்டுநர் உரிமம் என்று சொல்வதற்கு பதில் தலை கவசம் என்று சொல்லி விட்டார் ஹுனஷிகட்டி. எந்த ஒரு போக்குவரத்து காவல் அதிகாரியும் காரில் செல்பவர்கள் தலைக் கவசம் அணியவில்லை என்று அபராதம் விதிக்கும் அளவிற்கு முட்டாள்கள் இல்லை என்றும் அந்த உயரதிகாரி தெரிவித்துள்ளார்.