May 29, 2017 தண்டோரா குழு
கலிபோர்னியாவில் உள்ள சாண்டா ரயில் நிலையத்தின் மீது காதல் கொண்டு அதை திருமணம் செய்துக்கொண்டதாக பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தில் 45 வயது காரோல் என்பவர் வசித்து வருகிறார். அவர் சாண்டா ரயில் நிலையத்தை திருமணம் செய்துக்கொண்டதாக அண்மையில் தெரிவித்தார்.
இது குறித்து காரோல் கூறுகையில்,
“ எனக்கு சிறுவயதிலிருந்தே சாண்டா ரயில் நிலையத்தை பிடிக்கும். கடந்த 18 மாதங்களுக்கு முன், நான் சாண்டா-வை என் வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொண்டேன். அதற்கு டைட்ரா என்று பெயர் சூட்டினேன். ஒவ்வொரு நாளும், என்னுடைய வீட்டிலிருந்து 45 நிமிடம் பஸ்ஸில் பயணம் செய்து, டைட்ராவை சந்திக்க வருவேன். தினமும் அந்த ரயில் நிலையம் சென்று ஹலோ சொல்வேன், பின் அங்கேயே சிறிது தூரம் நடப்பேன். அங்குள்ள சுவர் மீது சாய்ந்து கொண்டு ரயில் நிலையத்துடன் பேசி கொண்டிருப்பேன். ஆனால், நான் பேசுவதை மற்றவர்கள் பார்க்கக்கூடாது என்பதை குறித்து கவனமாக இருப்பேன்” என்றார்.
இப்படி உயிரில்லாத பொருட்களுடன் தனிப்பட்ட ஈர்ப்பு ஏற்பட்டு, அதனுடன் ஒருவகையான உறவு வைத்துக்கொள்வதற்கு மனோதத்துவ ரீதியாக “objective sexuality” என்று பெயர்.
கடந்த 2008-ம் ஆண்டு, அமெரிக்காவை சேர்ந்த அமெரிக்கா என்னும் பெண் பாரிஸிலுள்ள ஐபில் டவரை திருமணம் செய்துக்கொண்டதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.