• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விமான நிலையங்களில் பயணிகளின் கைப்பைகளுக்கு சீல் கிடையாது

May 30, 2017 தண்டோரா குழு

சென்னை உட்பட ஆறு விமான நிலையங்களில்,வரும் ஜூன் 1 முதல் பயணிகள் கொண்டு செல்லும் கைப்பைக்கு பாதுகாப்பு சீல் போடும் நடைமுறை கைவிடப்படுகிறது.

பல ஆண்டுகளாக விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளில் கொண்டு செல்லும் கைப்பைக்கு சீல் போடும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், வரும் ஜூன் மாதம் 1ம் தேதி முதல், அந்த முறை நிறுத்தப்படவுள்ளது.

இது தொடர்பாக பாதுகாப்பு படையின் இயக்குனர் ஓ.பி.சிங் கூறுகையில்,

தற்போது, புதுதில்லி, மும்பை, கொச்சின், பெங்களூர், கொல்கத்தா, ஹைதராபாத், மற்றும் அகமதாபாத் ஆகிய விமான நிலையங்களில் உள்நாட்டு பயணிகளின் கைப்பைக்கு சீல் போடும் நடைமுறை ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து ஜெய்பூர், லக்னோ, கவுஹாத்தி, பாட்னா, சென்னை மற்றும் திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

விமான பயணத்திற்கு அச்சுறுத்தும் விதமான பொருட்களை எடுத்துச் செல்வதை தவிர்ப்பதற்கு இந்த பாதுகாப்பு சீல் போடப்படும் நடைமுறை செயல்படுத்தப்படுகிறது.

தற்போது, விமான நிலையங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்த அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள், ஸ்கேனிங் இயந்திரங்கள் வந்துவிட்டதால், பயணிகளின் கைப்பைகளுக்கு சீலிடும் முறையை படிப்படியாக கைவிடப்பட்டு வருகிறது.

மேலும் அடுத்த ஒரு வாரத்துக்கு விசாகப்பட்டினம், கோவா, புனே, புவனேஸ்வர், வாரணாசி உள்ளிட்ட விமான நிலையங்களில் துணை ராணுவத்தினர் சோதனை முறையில் இந்த நடைமுறையை செயலப்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் படிக்க