May 30, 2017 tamilsamayam.com
ஸ்ருதிஹாசன் “சங்கமித்ரா” படத்திலிருந்து வெளியேறவில்லை; நாங்கள் தான் நீக்கினோம் என்று படத்தின் இயக்குனர் சுந்தர் சி. கூறியுள்ளார்.
சுந்தர் சி இயக்கவுள்ள பிரமாண்டமான சரித்திர படமான “சங்கமித்ரா” படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் விலகிவிட்டதாக இணையதளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் சுந்தர் சி யின் இயக்குனர் டீம் இந்த தகவலை மறுத்துள்ளது.
“சங்கமித்ரா” படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் தானாகவே வெளியேறவில்லை. நாங்கள் தான் அவரை படத்தில் இருந்து நீக்கினோம். அவராக இந்த படத்தில் இருந்து வெளியேறினார் என்பது பொய்யான தகவல். அவரை இந்த படத்தில் இருந்து நீக்கியதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஒருசில காரணங்களை கூறியுள்ளோம். மீதி காரணங்களை நாகரீகம் கருதி கூறவில்லை. எனவே ஸ்ருதிஹாசன் தரப்பில் இருந்து வெளிவரும் பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம் என்று கூறினார்.