• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாட்டிறைச்சி தடைக்கு எதிராக தி.மு.க ஆர்பாட்டம்

May 31, 2017 தண்டோரா குழு

மாட்டிறைச்சிக்காக மாடு விற்பனை செய்ய விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் திமுக சார்பில்,அதன் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது,

இது திமுக.,வின் போராட்டம் மட்டும் அல்ல. தமிழகம் முழுவதும் கூட்டணி கட்சிகள் சார்பிலும் இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.மாட்டிறைச்சி விற்க தடை விதித்து 8 நாட்கள் ஆகின்றன. இந்த தடை உத்தரவிற்கு பிற மாநில முதல்வர்கள் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் தடை உத்தரவை முழுமையாக படித்து பார்த்து விட்டு கருத்துக் கூறுவதாக சொல்லியிருப்பது கண்டத்திற்குரியது. இந்த சட்டத்தை உடனடியாக திரும்பப் பெறாவிட்டால் மெரினா புரட்சி போன்று மற்றொரு புரட்சி உருவாகும்.

ஏற்கனவே தமிழக விவசாயிகள் வறட்சிபாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 400 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த சமயத்தில் விவசாயிகளை பாதிக்கும் வகையில் பா.ஜ., அரசு இந்த தடையை கொண்டு வந்துள்ளது.

இது போன்ற தடைகளால் தனிமனித உரிமை பறிக்கப்படுகிறது. மாட்டிறைச்சி தடை சட்டத்தை கொண்டு வரும் அதிகாரம் மாநில அரசுக்கு தான் உண்டு என கூறிய மத்திய அரசு, தற்போது அரசிய சட்டம் உரிமையை பறிக்கும் வகையில் நடந்து கொள்கிறது.

மோடி விரும்புவதை தான் நாம் சாப்பிட வேண்டும் என்றால் தனிமனித உரிமை பறிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது. சுதந்திர நாட்டில் வாழ்வதாக கூறிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இது போன்ற தடைகளால் தனிமனித உரிமை பறிக்கப்படுகிறது.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

மேலும் படிக்க