May 31, 2017 தண்டோரா குழு
பெல்ஜிய நாட்டில் விளையாட்டு போட்டியை துவக்கிவைக்க அந்நாட்டு இளவரசி துப்பாகியால்சுடும் போது அவர் அருகில் நின்றிருந்த பிரதமருர் கேட்கும் திறனை இழந்துள்ளார்.
பெல்ஜியம் நாட்டின் தலைநகரான புருசெல்சில் 2௦ கிலோமீட்டர் மராத்தான் ஓட்டப்பந்தயப் போட்டி ஞாயிற்றுக்கிழமை(மே 28) நடைபெற்றது. இந்த மராத்தான் போட்டியை தொடங்கி வைப்பதற்காக அந்நாட்டின் மன்னர் பிலிப்பின் இளைய சகோதரி ஆஸ்ட்ரிட் மற்றும் பிரதமர் சார்லஸ் மைக்கேல் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
அப்போது விளையாட்டு போட்டியை தொடங்கி வைப்பதற்காக, இளவரசி ஆஸ்டிரிட் துப்பாகியால் சுட்டார். துப்பாக்கியிலிருந்து வெளி வந்த சத்தத்தால், அவர் அருகில் நின்றிருந்த பிரதமர் மைக்கேல் தனது கேட்கும் திறனை இழந்துள்ளார்.
இது குறித்து செய்தி தொடர்பாளர் ஃப்ரெடெரிக் க்யூட்லியர் கூறுகையில்,
“தேசிய முதலீடு திட்டம் குறித்து, அவர் செவ்வாய்க்கிழமை(ஜூன் 6) பாராளுமன்றத்தில் பேசவிருந்தார். ஆனால், இந்த விபத்தால் ஏற்பட்ட செவி திறன் பிரச்னையால், இந்த கூட்டத்தில் பேசுவதை தள்ளி வைத்துள்ளார். இதற்கான உரிய மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். விரைவில் குணமடைந்து, தனது பணியை தொடங்குவார்” என்று தெரிவித்தார்.