• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜெர்மனி தேவாலையத்தில் ரோபோ ஒன்று பாதிரியாராக நியமனம்

May 31, 2017 தண்டோரா குழு

ஜெர்மனியில் உள்ள கிறிஸ்துவ தேவாலையம் ஒன்றில் ரோபோ ஒன்று பாதிரியாராக நியமிக்கப்பட்டுள்ளது. இது அங்குள்ள மக்களிடையே ஆச்சரியத்தை அளித்துள்ளது.

ரோபோக்களின் பயன்பாடு அனைத்து துறைகளிலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், ஜெர்மனியில் தேவலாயம் ஒன்றில் ‘மார்டின் லூதர்’ என்பவர் நினைவாக ரோபோ ஒன்று பாதிரியாராக நியமிக்கப்பட்டுள்ளது.

மார்டின் லூதர் ஏற்படுத்திய சீர்திருத்தத்தின் 5௦௦-ம் ஆண்டு நினைவாக ரோபோ பாதிரியார் நியமிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ரோபோவுக்கு ‘ப்ளேசஸ் யூ 2’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது ஜெர்மன், ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஷ் மற்றும் போலிஷ் ஆகிய ஐந்து மொழியில் ஆசிர்வாதத்தை மக்களுக்கு வழங்குகிறது.

மேலும் பைபிளிலுள்ள வசனங்களையும் சொல்கிறது. ஆலயத்திற்கு இந்த ரோபோ தனது இரண்டு கைகளும் உயர்த்தி ‘கடவுள் உங்களை ஆசிர்வத்து காப்பாற்றுவாராக’ என்று ஆசி வழங்குகிறது. தேவைபட்டால் அந்த ஆசிர்வாத வார்த்தைகளை ப்ரிண்டாகவும் எடுத்துக்கொள்ள முடியும்.

“இந்த புதிய திட்டத்தை சிலர் வரவேற்றுள்ளனர். ஒரு இயந்திரதிடமிருந்தா ஆசிர் பெறுவது என்று வேறு சிலர் எண்ணுகின்றனர்” என்று அந்த தேவலாயத்திற்கு வரும் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க