• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

‘சுவாதி கொலை வழக்கு’ திரைப்படத்துக்கு தடை விதிக்க சுவாதியின் தந்தை டிஜிபியிடம் மனு

May 31, 2017 தண்டோரா குழு

‘சுவாதி கொலை வழக்கு’ திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று சுவாதியின் தந்தை டிஜிபியிடம் மனு அளித்துள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் 24 தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் மென் பொறியாளர் சுவாதி மர்ம நபரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இது தொடர்பாக நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் சிறையில் அடைப்பட்ட நிலையில் அவர் மின்வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டார். சுவாதி கொலை ராம்குமார் தற்கொலை என இந்த வழக்கில் இன்னும் பல மர்மங்கள் இருந்து வருகிறது.

இந்நிலையில், விஜகாந்தை வைத்து உளவுத்துறை என்ற படத்தை இயக்கிய எஸ்.டி.ராமேஷ் செல்வன் என்பவர் சுவாதி கொலை சம்பவத்தை திரைப்படமாக எடுத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியானது. இதில் பல சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக புகார் எழுந்தது. அதிலும் ராம்குமார் கழுத்தை போலீசாரே அறுப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, சுவாதி கொலை வழக்கு திரைப்படத்துக்கு தடை விதிக்க கோரி டிஜிபியிடம் சுவாதியின் தந்தை சந்தானகோபாலகிருஷ்ணன் மனு கொடுத்துள்ளார்.

அதில், எங்களிடம் அனுமதி வாங்காமல் படத்தை எடுத்துள்ளனர். உண்மைக்கு புறம்பான விஷயங்கள் உள்ளன. படத்தை வெளியிட்டால் எங்கள் குடும்பத்திற்கு மேலும் மனவருத்தம் ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க