May 7, 2016 தண்டோரா குழு
உலகில் வாழும் ஊர்வன, பறவை மற்றும் விலங்கு வகைகளை பற்றி முழுவதும் அறிவதற்காக பல நாடுகளை சேர்ந்த அறிவியல் ஆராய்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
அதிலும் ஊர்வன வகையைச் சேர்ந்த உயினங்களில் இன்னும் இவ்வுலகில் மனிதர்கள் கண்டிராத வகையில் பலவகையானவை உள்ளன.
ஆனால் அவ்வாறு கண்டுபிடிக்கப்படும் அரியவகை உயிரினங்கள் திடீர் திடீரென அழிந்துவிடுவதாக கூறப்பட்டு வந்தது.
இதற்கு அறிவியல் விஞ்ஞானிகள் தாங்கள் கண்டு பிடிக்கும் அரியவகை உயிரினங்களின் வாழ்வியல் முறையையும், அவை வாழும் இடங்களையும் தங்கள் அறிக்கையில் பதிவு செய்து அதனை இணையதளத்தில் வெளியிடுவதான் காரணம் என புகழ் பெற்ற ஆங்கில நாளிதழ் ஓன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், அறிவியல் ஆராய்சியாளர்கள் தாங்கள் புதிதாக ஏதேனும் ஒரு உயிரினத்தை கண்டிபிடித்தால் அதனை தான் தான் கண்டுபித்தேன் என்பதற்காக அந்த இனம் இங்கு தான் வாழ்கிறது என்று குறிப்பிட்டு ஜூடாக்ஸா என்ற இணைய பத்திரிக்கையில் வெளியிடுகின்றனர்.
அப்படி வெளியிடப்படும் அறிக்கையை பயன்படுத்தி விலங்குகள், பறவைகள் மற்றும் ஊர்வான வகை உயிரினங்களை வேட்டையாடும் வியாபாரிகள் எளிதில் அதன் இருப்பிடத்தை கண்டறிந்து வேட்டையாடுகின்றனர். இதனால் பல அறிய வகையான உயிரினங்கள் அழிந்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
பொதுவாக இது போன்ற ஆராய்ச்சிகளால் பல்லி, பாம்பு, நத்தை, பட்டாம்பூச்சி, பறவைகள், ஊர்வான வகை உயிரினங்கள் தான் பெரிதும் பாதிக்கப் படுகின்றன. மேலும், உலகில் ஊர்வன வகைகள் பாதி தான் கண்டிபிடிக்கப் பட்டுள்ளது ஆனால், அதில் 1,390 ஊர்வன வகை உயிரினங்கள் உயிரியல் வள பயன்பாட்டிற்காகவும், 350 வகைகள் வளர்ப்பு பிராணி என்ற பெயரில் அழிக்கப்பட்டுவிட்டன.
இது குறித்து ஹெல்ம் ஹோல்ட்ஸ் சூற்றுச் சூழல் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த மார்க் அவுலியா கூறுகையில்,
பொதுவாக விலங்குகள் மற்றும் பறவைகளை வேட்டையாடும் வியாபாரிகள் பார்க்க அழகாகவும், வித்தியாசமாகவும் சந்தையில் யாரும் கண்டிராத வகை உயிரினங்ககளை தான் வேட்டையாட விரும்புவார்கள். எனினும், அவர்களுக்கு அதனை கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது.
ஆனால், அவர்களுக்கு அறிவியல் ஆராய்சியாளர்கள் தாங்கள் கண்டுபிடிக்கும் புதிய உயிரினங்கள் பற்றியும் அந்த இனம் வாழும் இடத்தை குறிப்பிட்டும் இணையத்தில் வெளியிடுவது வேட்டையாட எளிதாக மாறிவிட்டது.
இவ்வாறு இருப்பிடத்தை குறிப்பிட்டு வெளியிடுவதால் பல உயிரினங்கள் அழிந்து வருகின்றன என கூறியுள்ளார். மேலும், 1994ம் ஆண்டு அறிய வகையாகவும், அழிந்து வரும் நிலையிலும் இருந்த ரொட்டி தீவு பாம்பு கழுத்து ஆமை குறித்து ஆராய்ச்சி வெளிவந்தது. ஆனால் தற்போது வேடைக்காரர்கள் வேட்டையாடி அந்த இனத்தையே அழித்துவிட்டனர் எனவும் தெரிவித்தார்.
பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவரும் சர்வதேச இயற்கை பாதுகாப்பு கூட்டமைப்பு, தாங்கள் ஆராய்ச்சி செய்யும் உயிரினத்தின் இருப்பிடம் குறித்தும் எந்த தகவலையும் வெளியிட தேவையில்லை என்ற கொள்கையை வைத்துள்ளனர்.
இதன் மூலம் உயிரினங்கள் பாதுகாக்கப்படும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அதே சமயம், ஐரோப்பிய யூனியன் நாடுகளில் கடந்த 1௦ வருடத்தில் 2 கோடி ஊர்வன
உயிரினங்கள் வளர்ப்புக்காக இறக்குமதி செய்யபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.