June 2, 2017 தண்டோரா குழு
மேற்கு வங்கத்தை சேர்ந்த 18வயது பிப்லாப் என்ற மாணவன், தன் பெற்றோருடன் சேர்ந்து +2 தேர்வு எழுதியுள்ளார்.அவர்கள் எழுதிய தேர்வில் தாயும் மகனும் வெற்றி பெற்றனர், தந்தை தோல்வியடைந்துள்ளார்.
மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மோண்டல் குடும்பத்தினர். அந்த குடும்பத்தை சேர்ந்த தந்தை பல்ராம் மற்றும் கல்யாணியின் மகன் பிப்லாபுடன் சேர்ந்து இவ்வாண்டு நடந்த 12ம் வகுப்பு தேர்வில் கலந்துகொண்டனர். தேர்வு முடிவுகள் வெளி வந்தபோது, பிப்லாப் 5௦.6 சதவீதமும், கல்யாணி 45.6 சதவீதம் பெற்று தேர்ச்சி பெற்றனர். ஆனால், பிப்லாப்பின் தந்தை பலராம் தேர்வில் தோல்வியடைந்தார்.
நாடியா மாவட்டத்திலுள்ள ஹழ்ரன்பூர் மேல்நிலை பள்ளியில் மூன்று பெரும் சேர்ந்து, ஒன்றாக படித்தனர். மாலையில் வீடு திரும்பியதும் மூன்று பேரும் சேர்ந்து பாடங்களை படித்தனர். பிப்லாப் மட்டுமே பயிற்சி வகுப்புக்கு சென்றான். விவசாயம் பார்த்துக்கொண்டு, தேர்வுக்கு படிக்கும் பெற்றோருக்கும் சொல்லிக்கொடுப்பான்.
பிப்லாபின் தந்தை பல்ராம் கூறுகையில்,
“பரிட்சையின் முடிவு எனக்கு சந்தோஷத்தை தரவில்லை. ஆகவே மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கவுள்ளேன். அப்படியும் வெற்றிபெறவில்லை என்றால், மீண்டும் அடுத்தமுறை தேர்வு எழுதி வெற்றிப்பெறுவேன்” என்று கூறினார்.
“என்னுடைய தந்தை எங்களுடன் சேர்ந்த வெற்றிபெற்றிருந்தால், எங்களுடைய மகிழ்ச்சி முழுமையாக இருந்திருக்கும். அடுத்த முறை அவர் நல்ல மதிப்பெண் பெற்று தேர்வில் வெற்றி பெற நானும் என் தாயும் அவருக்கு உதவுவோம்” என்று பிப்லாப் தெரிவித்தார்.