June 2, 2017 தண்டோரா குழு
விதிமுறைகளுக்கு உட்பட்டு மீண்டும் அதே இடத்தில் புதிய சென்னை சில்க்ஸ் உருவாக்கப்படும் என சென்னை சில்க்ஸின் நிர்வாக இயக்குனர் மாணிக்கம் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது;
தீ விபத்தில் சிக்கிய சென்னை சில்க்ஸின் கட்டடத்தின் கட்டுமானத்தில் தெரிந்தே விதிமீறலில் ஈடுபடவில்லை. அப்போது எங்களுக்கு தேவையான அறிவுரையை யாரும் வழங்கவில்லை.
சென்னை மாநகராட்சி இது தொடர்பாக எங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட போது, கட்டத்தை சீர்செய்ய முயற்சி மேற்கொண்டோம். கட்டடத்தில் தீயணைப்பு வசதி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
தீ விபத்து நடந்தன்று தீயணைப்பு வீரர்களின் தாமதத்தால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டோம். தீ விபத்து குறித்து தகவல் தெரிவித்தும் தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் தாமதமாக தான் வந்தனர். அவர்கள் தாமதத்தால் கட்டடத்தையே தீ விழுங்கி விட்டது.
தீ விபத்தில் பல கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளன. கட்டட இடிப்பாடுகள் அகற்றப்பட்ட பின்னர் விதிமுறைகளுக்கு உட்பட்டு மீண்டும் அதே இடத்தில் புதிய சென்னை சில்க்ஸ் உருவாக்கப்படும்.”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.