June 3, 2017 தண்டோரா குழு
அதிமுகவில் டிடிவி தினகரன் நீடிப்பது குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிதான் முடிவு செய்வார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை ஏப்ரல் மாதம் 25–ம் தேதி தில்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் தினகரனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று இரவு தில்லி திகார் சிறையில் இருந்து தினகரன் விடுதலை செய்யப்பட்டார்.
தில்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிடிவி தினகரன்,
“சென்னை சென்று கட்சி பணிகளை தொடர்வேன். நான் கட்சியில் துணை பொதுச் செயலாளராக நீடிப்பேன். கட்சியில் இருந்து தன்னை நீக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கே உள்ளது” என்று தெரிவித்திருந்தார்.
இது குறித்து திருத்தணியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில்
“அதிமுகவில் டிடிவி தினகரன் நீடிப்பது குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிதான் முடிவு செய்வார்” என்றார்.