June 3, 2017 தண்டோரா குழு
ட்ரம்ப்க்கு எதிரான கருத்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்தால் விசா கிடையாது என டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து சட்டங்களை நிறைவேற்றி வருகிறார். இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க செல்ல விசா விண்ணப்பிப்போர்க்கு புதிய விதிமுறைகளை டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி இனி விசா விண்ணப்பதாரர்கள் அவர்களுடைய சமூக ஊடக கணக்குகளை கட்டாயம் ஒப்படைக்க வேண்டும். விசா விண்ணப்பிக்க வேண்டுமென்றால் கடந்த 15 ஆண்டுகளில் மேற்கொண்ட பயண வரலாறு மற்றும் கடந்த ஐந்து ஆண்டுகளில் பயன்படுத்தப்படும் சமூக வலைதள பக்கங்களின் அடையாளங்களை விசாவிற்கு விண்ணப்பிக்கும்போது ஒப்படைக்கவேண்டும் எனவும் விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது.
மேலும், விசா விண்ணப்பதாரர்களிடமிருந்து கூடுதல் தகவல்களைச் சேகரிப்பதன் மூலம், அவர்களின் அடையாளத்தை உறுதிப் படுத்துவதற்கும், பயங்கரவாதக் குழுக்களை சமூக ஊடக செயல்களை வைத்து கண்டுப்பிடிக்கவும் பயன்படும் என டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதைப்போல் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்க்கு எதிரான கருத்துக்களை சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்திருந்தால் அவர்களுக்கு விசா வழங்கப்படாது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டிரம்ப் நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.