June 5, 2017 தண்டோரா குழு
சீனாவில் சுமார் 1௦௦௦ ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் ஒன்றை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இது குறித்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஒருவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
“சீனாவின் சென்குடு நகரத்தில் சுமார் 1௦௦௦ ஆண்டுகள் முன்பு உள்ள கோவிலை ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடித்துளோம். கி.மு 317 முதல் 420 வரை சினாவை கிழக்கு ஜின் ராஜ்யத்தின் சிற்றசர்கள் ஆட்சி செய்தனர்.
அதேபோல் கி.மு 1127 முதல் 1279 வரை தென் சாங் ராஜ்யத்தை சிற்றசர்கள் ஆட்சி செய்தனர். இந்த இரண்டு சிற்றசர்களின் ஆட்சி காலங்களில் இந்த கோவில் இருந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.
கி.மு 618 முதல் 9௦7 வரை ஆண்ட டாங் சிற்றசர்கள் ஆட்சி செய்த காலத்தில் சீனாவில் கடும் வறட்சி ஏற்பட்டது. அப்போது டாவ்சுன் என்னும் துறவி அந்த கோவிலில் பூஜை செய்ததாகவும் அதன் பலனாக மழை பெய்து நாட்டில் செழிப்பை கொண்டு வந்தது என்றும் கூறப்படுகிறது.
புகழ்பெற்ற டாங் வம்ச கவிஞர் லியு யுசி, அந்த கோவிலின் தோற்றம் சொர்கத்தை போன்று இருப்பதாக கவிதை ஒன்றில் விவரித்து இருந்தார். அவர் எழுதிய கவிதை அந்த கோவிலில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அந்த காலக்கட்டத்தில், கோவிலின் முக்கியத்துவம் குறித்து அந்த கவிதையில் குறிப்பிடப்பட்டிருந்து.
டாங் மற்றும் சாங் ஆட்சியின் பிற்பகுதியில் அந்த கோவில் சரியாக பராமரிப்பின்றி இருந்துள்ளது. அதன் பிறகு வந்த காலக்கட்டத்தில், நடந்த போர்கள் காரணமாக அது காணமல் போய்விட்டது.
புராண நூல்கள் மற்றும் 5௦௦ மேற்பட்ட கல் சிற்பங்கள் மற்றும் 1௦௦௦க்கும் மேற்பட்ட கல்லில் செதுக்கப்பட்ட எழுத்தக்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் ஒரு பகுதியை தான் நாங்கள் தோண்டியெடுத்துயுள்ளோம். ஆனால், அதனுடைய முந்தைய பெருமையை குறித்து அறிந்துக்கொண்டோம்.
ஆலயத்தின் அடித்தளம், அதை சுற்றியுள்ள கட்டடங்கள், கிணறுகள், சாலைகள் மற்றும் சாக்கடை இடிப்படுகள் ஆகியவையை கண்டுப்பிடித்துயுள்ளோம். கிபி. 16௦௦ முதல் 256 வரை ஷாங் மற்றும் ஜோ மன்னர்கள் ஆட்சிகாலத்தை சேர்ந்த 80 பண்டைய கல்லறைகள் ஆலயத்திற்கு அருகே அகழ்வாராய்ச்சியின்போது கண்டுப்பிடித்துயுள்ளோம்”.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.