June 6, 2017 தண்டோரா குழு
உலகின் மிகப்பெரிய விமானத்தை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணை நிறுவனர் பால் ஆலன் கட்டமைத்துள்ளார்.
அமெரிக்காவிலுள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணை நிறுவனர்பால் ஆலன். அவர் விண்வெளி நிறுவனம் ஸ்டிராடோவின் உரிமையாளரும் கூட. அவர் ஸ்டிராடோ நிறுவனத்துடன் சேர்ந்து உலகின் மிகபெரிய விமானத்தை கட்டமைத்துள்ளார்.
கடந்த 2௦11ம் ஆண்டு, ஸ்டிராடோ நிறுவனம் நிறுவப்பட்டது. குறைந்த பூமி சுற்றுப்பாதை(Low Earth Orbit)யை வசதியான, நம்பகமான மற்றும் வழக்கமான அணுகுமுறை வைப்பது தான் இந்த நிறுவனத்தின் நோக்கம்.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு பாலைவனத்தில், ஸ்ட்ரேடோலாஞ்ச் (Stratolaunch) என்னும் அந்த விமானத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
இந்த விமானம் 238 அடி நீளமும் 5௦அடி உயரமும் உடையது. இதற்கு28 சக்கரங்களும் உள்ளது. பொதுமக்கள் பார்வைக்கு முதல் முறையாக வைக்கப்பட்டுள்ளது. விமான இறக்கைகள் 385 அடி நீளமும் 50 அடி உயரமும் கொண்டுள்ளன. 226 டன் எடை கொண்ட இந்த ஸ்ட்ரேடோலாஞ்ச், 113 டன் எரிபொருளை சேமிக்கும் வசதி கொண்டது. மட்டுமின்றி 400 டன் எடை கொண்ட பொருட்களை எடுத்துச் செல்ல முடியும்.இதன் இறக்கைகள் மட்டும் ஒரு கால்பந்து மைதானத்தை விட பெரியதாக உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
2௦19ம் ஆண்டு தனது முதல் பயணத்தை தொடங்குவதற்கு முன் சில சோதனைகள் மேற்கொள்ளப்படும்.இவ்வளவு சிறப்பான ஸ்ட்ரேடோலாஞ்ச், பயணிகளுக்காக வடிவமைக்கப்படவில்லை. ராக்கெட்டுகளை சுமந்து செல்லும் பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கிறது.