June 6, 2017 தண்டோரா குழு
மலையேறு வீரர் அலெக்ஸ் ஹோண்நோல்ட் கயிறுகளை பயன்படுத்தாமல் எல் காபிடன் மலை சிகரத்தை வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகணத்திலுள்ள சாக்ரமெண்டோ நகரை சேர்ந்தவர் அலெக்ஸ் ஹோண்நோல்ட்(31). புகழ்பெற்ற மலையேறும் வீரர் கூட. இவர், வட கலிபோர்னியாவிலுள்ள சியரா நெவாடா மலைபகுதியில் யோசெமைட் தேசிய பூங்காவில், 3,௦௦௦ அடி கொண்ட எல்காப்தியன் என்னும் மலையை 3 மணிநேரம் 56 நிமிடங்களில் ஏறி சாதனை புரிந்துள்ளார். அமேரிக்கா, சீனா, ஐரோப்பா, மற்றும் மொராக்கோ ஆகிய இடங்களிலுள்ள மலைபகுதியில் கடந்த ஒரு ஆண்டு காலமாக பயிற்சி எடுத்துக்கொண்டார்.
இது குறித்து, அலெக்ஸ் கூறுகையில்,
“எனக்கு ஏற்படும் பயத்தை கட்டுப்படுத்தும் திறனால்தான், எனக்கு வெற்றியை தருகிறது. அதுவும் தனிமையாக மலை ஏறும்போது, பல ஆபத்துகளை தரும் என்று நன்கு அறிவேன். பயத்துடன் மலையேறும் போதும், எனக்கு எந்த உதவியும் கிடைக்கப்போவதில்லை. அது என்னுடைய செயல்திறனுக்கு தடையாக தான் இருக்கும். அதனால் நான் பயத்தை விட்டுவிடுவேன்” என்று கூறினார்.