June 7, 2017 தண்டோரா குழு
மாடுகளை இறைச்சிக்காக விற்க விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரிய மனு மீது ஜூன் 15-ல் உச்சநீதிமன்றம் விசாரணை நடைபெறுகிறது.
நாடு முழுவதும் சந்தைகளில் பசு, எருமை, ஒட்டகம், காளை ஆகியவற்றை விற்பதற்கு தடை விதித்து மத்திய அரசு உத்திரவு பிறப்பித்தது.இதற்கு பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதற்கிடையில்,ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அமைப்பு ஓன்று மாட்டிறைச்சிக்கு எதிரான தடை குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதையடுத்து, ஹைதராபாத் அமைப்பு தொடுத்த வழக்கை ஜூன் 15 ல் உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.